விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்
மார்த்தாண்டம், செப்.26: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மையம் சார்பாக விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று மாலை 3 மணி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி சுமை மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் விளங்கோடு வட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் ராஜா சிங், பொருளார் ஜூனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர் மற்றும் நில ஆய்வாளர்கள் அலுவலக உதவியாளர்கள் வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement