பஸ்சில் இருந்து இறங்கிய போது ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி
குளச்சல், அக். 25: சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் முச்சந்தி (80). இவர் நேற்று முன்தினம் வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு காட்டுவிளையில் உள்ள கோயிலுக்கு பஸ்சில் சென்றார். ஈத்தங்காடு பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து முச்சந்தி இறங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முச்சந்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதையடுத்து வெள்ளிச்சந்தை போலீசார் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் சரல்விளையை சேர்ந்த சின்னத்துரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement