மண்டைக்காட்டில் அ.தி.மு.க சார்பில் நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவி
குளச்சல், அக்.23:கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் மண்டைக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் நலிவுற்ற குடும்பங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்து நலிவுற்றோருக்கு வேஷ்டி, சேலை, இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் வக்கீல் ரமேஷ், மணிகண்டன், ராஜேஷ், விஜயன், சிவநேசன், சமுத்திர பாண்டியன், தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement