நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.12 லட்சத்தில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில், நவ. 22: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில், ரூ.12 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி 21வது வார்டுக்குட்பட்ட ராணித்தோட்டம் வடக்கு தெரு, 7வது குறுக்கு தெருவில் ரூ.3.90 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணி மற்றும் 46வது வார்டுக்குட்பட்ட வடக்கு சூரங்குடி பிச்சைகால சுவாமி கோயில் தெருவில், ரூ.8.10 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் சீரமைக்கும் பணியை நேற்று முன்தினம் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர்கள் ஜோனா கிறிஸ்டி, வீரசூரபெருமாள், உதவி செயற்பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ராஜமாணிக்கம், திமுக பகுதி செயலாளர்கள் சேக்மீரான், ஜீவா, வட்டச்செயலாளர் ஆதித்தன், நிர்வாகிகள் தமிழ்செல்வன், முகமது ஹபீப், ராயப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்: நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் நடந்தது. இதில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட மொத்தம் 11 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.