மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா
நாகர்கோவில்,நவ.21: நாகர்கோவில் மாவட்ட மைய நூலகத்தில், 58 வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. நிறைவு விழா நிகழ்ச்சியில் மூன்றாம் நிலை நூலகர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட நூலக அலுவலர்(பொ) மேரி தலைமை வகித்தார். நூலக வார விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் சத்திய குமார் மற்றும் உதவி அலுவலர் துரை ஆகியோர் பரிசுகள் வழங்கி பேசினர். கவிஞர் தக்கலை ஹலீமா சிறப்புறையாற்றினார். தமிழ் பேராசிரியர் டாக்டர் சித்ரா வாழ்த்துரை வழங்கினார். கீழபுத்தளம் ஊர்ப்புற நூலகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊர்ப்புற நூலகர் பாஸ்கருக்கு டாக்டர்.எஸ்ஆர்அரங்கநாதன் விருது மற்றும் ஈத்தாமொழி ஊர்ப்புற நூலகத்தில் சிறப்பாக பணியாற்றிய வாசகர் வட்டத்திற்கு நூலக ஆர்வலர் விருது பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் வாசகர் வட்டத்தலைவர் சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், நூலக பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் போட்டி தேர்வுக்கு பயிலும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.