நித்திரவிளை கிறிஸ்துராஜபுரம் ஜெயமாதா மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினவிழா
நித்திரவிளை, ஆக.20 : நித்திரவிளை கிறிஸ்துராஜபுரத்தில் அமைந்துள்ள ஜெயமாதா மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் டோஸ்ட் மாஸ்டர்கள் இன்டர்நேஷ்னல் கிளப்பின் திருவனந்தபுரம் மைத்ரீயின் துணை தலைவர் பெபின் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஜோஸ் முட்டத்துபாடம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement