தக்கலை பகுதியில் புகையிலை விற்ற 2 கடைகளுக்கு சீல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி
நாகர்கோவில், ஆக.20: தக்கலை அருகே ஆலங்கோடு மற்றும் குருந்தன்கோடு அருகே செக்காரவிளை ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் புகையிலை சோதனை மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன், பிரவீன் ரகு, ரவி, ஜெஃப்ரி மோள், சக்தி முருகன் அடங்கிய குழு இந்த சோதனையை மேற்கொண்டனர். சோதனையின் போது 2 கடைகளிலும் தடை செய்யப்பட்ட கணேஷ் மற்றும் கூல் லிப் புகையிலை பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உடனடியாக இரண்டு கடைகளையும் மூடி சீல் வைத்தனர்.
Advertisement
Advertisement