நித்திரவிளை அருகே டெம்போ மீது பைக் மோதி மெக்கானிக் படுகாயம்
நித்திரவிளை, ஆக.20 : நித்திரவிளை அருகே கிராத்தூர் வடக்கே விறகு வெட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ்குமார்(45). இவர் நடைக்காவு பகுதியில் பேன், மிக்சி, கிரைண்டர் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் சுமார் 1.30 மணியளவில் ராஜ்குமார் பைக்கில் நித்திரவிளையில் இருந்து நடைக்காவு நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது கல்வெட்டான்குழி பகுதியில் ஒரு வாகனத்தை முந்தி சென்ற போது, எதிரே வந்த டெம்போவில் பைக் மோதியுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சுனில் ராஜ்குமார் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக டெம்போ டிரைவர் அனீஷ் (28) கொடுத்த புகார் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement