விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21ம் தேதி நடக்கிறது
நாகர்கோவில், ஆக. 19: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 21ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நடக்கிறது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து ஜூலை மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ெபறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும். மாவட்ட ஆட்சித்தலைரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Advertisement
Advertisement