பொய்கை அணையில் இன்று தண்ணீர் திறப்பு தமிழக அரசு அறிவிப்பு
நாகர்கோவில், நவ. 18: தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆரல்வாய்மொழி கிராமத்தில் அமைந்துள்ள பொய்கை அணையில் இருந்து, தோவாளை தாலுகா மற்றும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பாசன நிலங்களுக்கு, இன்று (18ம் தேதி) முதல் டிசம்பர் 3ம் தேதி வரை 16 நாட்களுக்கு, வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் இருப்பை பொறுத்து, தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மற்றும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாக்களில் உள்ள ஆரல்வாய்மொழி, குமாரபுரம் மற்றும் பழவூர் கிராமங்களில் உள்ள 450.24 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement