72-வது கூட்டுறவு வாரவிழா
நாகர்கோவில், நவ.18: 72-வது கூட்டுறவு வாரவிழா 3-ஆம் நாள் நிகழ்ச்சியையொட்டி கல்குளம் கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனை பிரிவு திறந்து வைக்கப்பட்டு விற்பனை மேளா நடைபெற்றது. பண்டகசாலை செயலாட்சியர் பேபி ரமேஷ் தலைமை வகித்தார். பிரியா வரவேற்றார். கூட்டுறவு சார் பதிவாளர், கள அலுவலர் அனிஷ் திட்ட விளக்கவுரை ஆற்றினார். கூட்டுறவு சார் பதிவாளர்,மேலாண் இயக்குனர் ஜோல்டர் பேருரை நிகழ்த்தினார். கிறைஸ்டல் ராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பண்டகசாலை பணியாளர்கள், மேலாளர் லெட்சுமணன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பண்டகசாலை மேலாளர் பத்ம குமார் செய்து இருந்தார்.
Advertisement
Advertisement