நீதிபதி மீது செருப்பு வீசியதை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், அக். 18: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பை வீசியதை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா முன்பாக நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், மாநில பேச்சாளர் அன்பழகன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினர். ம.தி.மு.க மாவட்ட செயலாளர் வெற்றிவேல், காங்கிரஸ் சார்பாக முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வி.சி.க சார்பாக பகலவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட முன்னாள் செயலாளர் இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக அகமது உசேன், திக கோட்டாறு பகுதி தலைவர் மணிமேகலை ஆகியோர் பேசினர். மாவட்ட திக காப்பாளர் பிரான்சிஸ், பொதுக்குழு உறுப்பினர் மணி, மாவட்ட மகளிரணி தலைவர் இந்திரா மணி, திக மாவட்ட துணைத்தலைவர் நல்ல பெருமாள், துணை செயலாளர் அய்சக் நியூட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திக வடசேரி பகுதி தலைவர் முத்து வைரவன், கென்னடி, குமரிச்செல்வன், பால்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் நன்றி கூறினார்.