திருவனந்தபுரத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய குறை தீர் முகாம்
திருவனந்தபுரம், அக். 16: முன்னாள் ராணுவ வீரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் சிவிலியன் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம், புதிய ஸ்பார்ஷ் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்படும் பயன்கள் மற்றும் குறைகள் தொடர்பான முகாம், இன்று (16ம் தேதி) திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ முகாமில் உள்ள கரியப்பா அரங்கத்தில் நடைபெறுகிறது. கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். டெல்லி ராணுவ கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் மற்றும் சென்னை ராணுவ கட்டுப்பாட்டாளர் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement