நித்திரவிளை அருகே மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
நித்திரவிளை, செப்.15 :நித்திரவிளை அருகே கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் மனைவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நித்திரவிளை அருகே சாத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெபின் தாஸ் (35) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நிஷா (30), இவர் நித்திரவிளையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நிஷா சம்பவத்தன்று காலை 9 மணியளவில் நித்திரவிளை செல்வதற்காக நடைக்காவு ஆர்.சி.சர்ச் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நிற்கும் போது, அங்கு வந்த ஜெபின்தாஸ், மனைவியை பார்த்து தகாத வார்த்தைகள் பேசி, தலை மற்றும் கன்னத்தில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது சம்பந்தமாக நிஷா கொடுத்த புகார் மீது நித்திரவிளை போலீசார் ஜெபின் தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.