குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்
நாகர்கோவில், ஆக.13 : குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 341 முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 12 வரை 102 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி (இன்று) அன்று 6 முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் பத்மநாபபுரம் நகராட்சி வார்டு 10, 11, 12க்கு பேலஸ் ரோடு லட்சுமி மஹால், இடைக்கோடு பேரூராட்சிக்கு மேல்புறம் தோழமை சமூக நலக்கூடம், பாலூர் ஊராட்சிக்கு பூட்டேற்றி பிடிஏ சமூக நலக்கூடம், தடிக்காரன்கோணம் ஊராட்சிக்கு வாழையத்துவயல் ஆதி திராவிடர் மேல்நிலை பள்ளி, கணியாகுளம் ஊராட்சிக்கு பொன்ஜெஸ்லி பொறியியியல் கல்லூரி ஆடிட்டோரியம், பாலமோர் ஊராட்சிக்கு கீரிப்பாறை சூழியல் சுற்றுலா மையம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.