ஆசாரிபள்ளத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், டிச.12: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ேநற்று நடந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை பின் வாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மணவை கண்ணன், சதீஷ்பாபு, ஞானசேகர், ஸ்டாலின், ஆண்டனி ராஜ், யாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
Advertisement