கோதையார் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ ஆய்வு
மார்த்தாண்டம், டிச.12: கோதையாரில் காமராஜர் ஆட்சி காலத்தில் 40 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நீர்மின் நிலையத்தின் டர்பைன் ஜெனரேட்டர் 2ம் யூனிட்டில் திடீர் நீர்கசிவு ஏற்பட்டது. இதனை அறிந்த தாரகை கத்பர்ட் எம்எல்ஏ நீர்மின் நிலையத்துக்கு சென்று டர்பைன் ஜெனரேட்டரில் நீர்கசிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விரைந்து பணிகள் நடந்து நீர்கசிவு தடுத்து நிறுத்தப்பட்டு மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement