கன்னியாகுமரி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை
கன்னியாகுமரி,டிச.12: தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கன்னியாகுமரி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் நாகர்கோவில் நகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரிஸ்டீபன், துணைத் தலைவர் ஜெனஸ் மைக்கேல் அகத்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement