நாகர்கோவில் எஸ்.பி. ஆபீசில் மேலும் ஒரு லிப்ட் வசதி
நாகர்கோவில், ஆக. 12: நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தில் பழைய கட்டிடம் தரை தளம், முதல் தளம், 2ம் தளம் என மூன்று தளங்களை கொண்டுள்ளது. இதில் எஸ்.பி. தனிப்பிரிவு, சைபர் கிரைம், மாவட்ட குற்றப்பிரிவு 1, 2 உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள் உள்ளன. புதிய கட்டிடம், பழைய கட்டிடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய கட்டிடத்தில் மட்டும் லிப்ட் வசதி உள்ளது. பழைய கட்டிடத்தில் லிப்ட் இல்லாததால், பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து பழைய கட்டிடத்திலும் தற்போது ரூ.45 லட்சம் செலவில் லிப்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த பணிகள் முடிவடைந்து லிப்ட் பொருத்துவதற்கான பணிகள் தொடங்கும் என தெரிகிறது.