தக்கலையில் த.மு.மு.க. 31வது ஆண்டு துவக்க விழா
தக்கலை, செப்.9: த.மு.மு.க.வின் 31வது ஆண்டு துவக்க விழா நிகழ்வுகள் தக்கலையில் நடைபெற்றது. தக்கலை நகர தலைவர் நாசர் தலைமை வகித்தார். நகர செயலாளர் ரியாஸ் திருக்குர் ஆன் வசனம் ஓதினார். மமக மாவட்ட துணை செயலாளர் அலி அக்பர் துவக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் (பொறுப்பு) மஹுபூப் ஜெய்லானி கொடியேற்றி வைத்தார். மாவட்ட மமக செயலாளர் அபூபக்கர் சித்திக் சிறப்புரை நிகழ்த்த முன்னாள் மாவட்ட செயலாளர் எச். பீர் முகைதீன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை செய்யது கான், நகர பொருளாளர் அசீம், நகர மருத்துவ அணி ஆசிப் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் மற்றும் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் பொறுப்பு வகிக்கும் ஜெயிலானி கூறுகையில், ஜமா அத்தாரோடு ஒருங்கிணைந்து நூலகம் மற்றும் கல்வி மூலம் புரவலர்களை நாடி அறிவை ஊட்டி வளம் பெற செய்வது, மார்க்க கல்வியோடு உலகக்கல்வியையும் வழங்கி தேவையான சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது. பள்ளி செல்லும் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுடைய கனவை நனவாக்க வழிகாட்டுதல், நம்மில் இருந்து பிரிந்துசென்ற நம்மவர்களோடும் பிற சமுதாய அமைப்புக்களோடும் சகோதர பாசத்தோடு புரிதலை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறினார்.