புனித அல்போன்சா கல்லூரி மாணவர்கள் வெற்றி
கருங்கல், அக்.8: கன்னியாகுமரி மாவட்ட முதலமைச்சர் கோப்பை ஹாக்கி போட்டியில் கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி முதலிடம் பெற்றது. அத்தோடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிக்கு புனித அல்போன்சா கல்லூரி மாணவர்கள் 11 பேர் கன்னியாகுமரி அணிக்காக தெரிவு செய்யப்பட்டனர். முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நாகர்கோவில் எஸ்டி இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல கல்லூரிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியின் இறுதி சுற்றில் கலந்து கொண்ட அல்போன்சா கல்லூரி மாணவர்கள் முதலிடத்தையும் ஸ்டெல்லா மேரிஸ் அணியினர் இரண்டாம் இடத்தையும் மூன்றாவது இடத்தை மார் எப்ரான் கல்லூரி அணியும் பெற்றனர். முதல் இடத்தைப் பெற்ற கல்லூரி வீரர்களுக்கு ரூ.3000 பணம் முடிப்பும் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற அணி வீரர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த ஜீன் பிரேம்குமார் உடற் கல்வி இயக்குனர்கள் ஏபி சீலன், அனிஷா ஆகியோரையும் கல்லூரி தாளாளர் தாமஸ் பூவத்தும் மூட்டில், கல்லூரி முதல்வர் முனைவர் ஆஞ்சலோ ஜோசப், துணை தாளாளர் அருட்தந்தை அஜின் ஜோஸ், உதவி முதல்வர் சிவனேசன் மற்றும் பேராசிரியர்களும், மாணவர்களும் வாழ்த்தினார்கள்.