திமுக பொறுப்பாளர் நியமனம்
தக்கலை, அக்.8: திருவிதாங்கோடு பேரூர் திமுக பொறுப்பாளராக திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் ஹாரூன் ரசீது என்ற நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை மாவட்ட செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ் பரிந்துரையின் பேரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். இதையடுத்து ஹாரூன் ரசீது என்ற நசீர் மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தக்கலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அருளானந்த ஜார்ஜ் உடன் இருந்தார்.
Advertisement
Advertisement