கனகப்பபுரம் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
அஞ்சுகிராமம், டிச.7: கனகப்பபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை (பொறுப்பு) பிரபாவதி தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவி சுனிதா, துணைத்தலைவர் விஜிலா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வக்கீல் சாம் சுரேஷ்குமார் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து தமிழ் வளர்ச்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement