கேரள முதல்வரின் குறைதீர்ப்பு அலுவலகத்திற்கு போன் செய்து பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு வாலிபர் கைது
திருவனந்தபுரம், டிச.7: கேரள முதல்வரின் குறைதீர்ப்பு அலுவலகத்திற்கு போன் செய்து பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரத்தில் `சிஎம் வித் மீ’ என்ற பெயரில் முதல்வர் குறைதீர்ப்பு அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த அலுவலகத்திற்கு போன் செய்து தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்திற்கு போன் செய்த ஒருவர் பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரம் மியூசியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் ஆபாசமாக பேசியது செங்கணூர் பகுதியை சேர்ந்த அர்ஜூன் (34) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement