கோவையில் மாணவி பலாத்காரத்தை கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜ மகளிரணி ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், நவ. 7: கோவையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு குமரி மாவட்ட பாஜ மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட
Advertisement
மகளிரணி தலைவி ராணி ஜெயந்தி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட மகளிரணி தலைவர் கலா கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமாரதி ராஜன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சத்ய, மகளிரணி பொதுச்செயலாளர்கள் திவ்யா, அனுசியா தேவி, ஷீபா, விஜயராணி, கவுன்சிலர் ரோசிட்டா திருமால் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். இதில் பா.ஜ கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், பொருளாளர் முத்துராமன், கவுன்சிலர்கள் சுனில், ஐயப்பன், ஊடகப்பிரிவு தலைவர் சந்திரசேகர், திருமால், தர், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement