ஆரல்வாய்மொழி அருகே 2 வாலிபர்களுக்கு சரமாரி சாவிகுத்து
ஆரல்வாய்மொழி, நவ. 7: ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (24). இவரும், அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(24) ஆகியோர் கணேசபுரம் வாட்டர்டேங்க் அருகே நடந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராபின்சன், மெல்வின் ஆகியோர் பைக்கை ரைஸ் செய்து கொண்டு இருந்தனர். இதனால் சத்தம் அதிகமாக வந்து கொண்டு இருந்தது. இதனை பார்த்த புஷ்பராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் அவர்களிடம் வீடுகள் அதிகமாக உள்ளது. ஏன் இப்படி பைக்கில் இருந்து சத்தத்தை எழுப்புகிறீர்கள் என கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராபின்சன், மெல்வின் ஆகியோர் புஷ்பராஜ் மற்றும் ராமகிருஷ்ணனை தாக்கி, கையில் இருந்து சாவியால் தலையில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் புஷ்பராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு தலையில் சாவிக்குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த இருவரும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இது குறித்து புஷ்பராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.