தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
குமாரபுரம், ஆக. 7: தக்கலை அருகே முளகுமூட்டில் தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.ஐ. இம்மானுவேல் அங்கு சென்ற போது சந்தேகப்படும்படி நின்ற 3 வாலிபர்களை பிடித்து சோதனையிட்டார். அப்போது அவர்களிடம் தலா 3 கிராம் வீதம் 3 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. உடனே அவர்களை தக்கலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கடையாலுமூட்டை சேர்ந்த சித்திக் மகன் முகம்மது ரூபின் (25), ேமக்காமண்டபத்ைத சேர்ந்த பால்ராஜ் மகன் மோனிஷா பால் (25), அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்துதாஸ் மகன் பிளசிங்தாஸ் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. முகம்மது ரூபின் மற்றும் பிளசிங் தாஸ் ஆகிய இருவரும் கணக்கர்களாக பணியாற்றி வருகின்றனர்.