அருமனை அருகே பெண்ணிடம் ஆபாச செய்கை காண்பித்த பஸ் டிரைவர் கைது
அருமனை, நவ. 6: அருமனை அருகே முழுக்கோடு பகுதியில் பழக்கடை நடத்தி வருபவருக்கு 34 வயதில் மனைவி உள்ளார். இந்தநிலையில் பழக்கடைக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இது அவரது மகன் பிராங்கிளின் (49) என்பவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. பிராங்கிளின் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு பெண் பழக்கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த பிராங்கிளின் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஆபாச செய்கை காண்பித்து தகராறு செய்துள்ளார். அப்போது இதனை தடுக்க வந்த பெண்ணின் கணவரையும், பிராங்கிளின் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து அந்த பெண் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பிராங்கிளின் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
Advertisement
Advertisement