ஆடவர் கைப்பந்து போட்டியில் அல்போன்சா கல்லூரி இரண்டாம் இடம்
கருங்கல், நவ.6: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கைப்பந்து போட்டிகள், அம்பை கலைக்கல்லூரியில் நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து பல அணிகள் பங்கு பெற்றன. இப்போட்டியில் கலந்து கொண்ட புனித அல்போன்சா கல்லூரி ஆடவர் பிரிவில் இரண்டாம் இடத்தையும், மகளிர் அணி நான்காம் இடத்தையும் பெற்று, கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்தனர். பரிசு பெற்ற அணி வீரர், வீராங்கனைகளையும், சிறந்த முறையில் பயிற்சி அளித்த பயிற்சியாளர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஏபி சீலன், உதவி உடற்கல்வி இயக்குனர் அனிஷா ஆகியோரை கல்லூரி தாளாளர் தாமஸ் பூவத்தும் மூட்டில், முதல்வர் முனைவர் ஆஞ்சலோ ஜோசப், துணை தாளாளர் அருட்தந்தை அஜின் ஜோஸ், உதவி முதல்வர் சிவனேசன் மற்றும் பேராசிரியர்களும், மாணவர்களும் வாழ்த்தினர்.