நாகர்கோவிலில் மாநில அளவிலான ராப்பிட் சதுரங்க போட்டி 9ம் தேதி நடைபெறுகிறது
நாகர்கோவில், நவ.5: நாகர்கோவிலில் வருகிற 9ம் தேதி மாநில அளவிலான ராப்பிட் சதுரங்க போட்டி நடைபெறுகிறது. இவான்ஸ் செஸ் கிளப் செயலாளரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜீவன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 3வது கே.ஆர்.சி.ஐ செஸ் கோப்பைக்கான மாநில அளவிலான ராப்பிட் சதுரங்க போட்டி நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகில் உள்ள ஞானாய் தெருவில் அமைந்துள்ள எஸ்ஜிஎஸ் மண்டபத்தில் வருகிற 9ம் தேதி (ஞாயிறு) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, கோப்பை மற்றும் அதிகளவில் மாணவர்கள் கலந்து கொள்ளும் 2 பள்ளிகளுக்கு கேடயமும் வழங்கப்படும். விளையாட்டு வீரர்கள் மாநில, தேசிய மற்றும் தரவரிசை போட்டிகளுக்கு செல்லும் முன் இத்தகைய ஓப்பன் போட்டிகளில் கலந்து கொள்வது அவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் வருகிற 7ம் தேதி மாலை 7 மணிக்குள் www.evanschessclub.com என்ற இணைய தளமுகவரியிலோ அல்லது 94431 30908 என்ற எண்ணிலோ தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.