சாலையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை சிறை பிடித்த கிராம மக்கள் தக்கலை அருகே பரபரப்பு
குமாரபுரம், நவ. 5: தக்கலை அருகே முத்தலக்குறிச்சி பகுதியில் இருந்து ஆலங்கோடு செல்லும் சாலை செப்பனிட ஆத்திவிளை ஊராட்சி சார்பாக ரூ.1 கோடியை 10 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து சாலை பணி நிறைவடைந்துள்ளது. சாலை பணியானது அரசு விதிமுறைகளை மீறி பழைய தார் சாலையை அகற்றாமல் அதன் மேல் புதிதாக தார் சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சாலை உயர்ந்துள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க முடியாமல் திணறுகின்றன. இதனால், பல முறை வாகனங்கள் விபத்தில் சிக்கி உள்ளது. இந்நிலையில், சாலை பணியை ஆய்வு மேற்கொள்ள பத்மநாபபுரம் உட்கோட்ட சாலை உதவி செயற்பொறியாளர் முருகன் அப்பகுதிக்கு வந்தார். அவரது வாகனத்தை பொது மக்கள் தடுத்து நிறுத்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.