வழிபாட்டு தலங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலி பெருக்கிகள் கலெக்டரிடம் புகார்
நாகர்கோவில், டிச.2: மதசார்பற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர் யோவான் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனு: நித்திரவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்கள் காணப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளன. இங்கு காவல்துறையின் அனுமதியில்லாமல் வழிபாட்டு தல கோபுரங்களிலும், அருகில் உள்ள மரத்தின் உச்சியிலும் கூம்பு மற்றும் சக்திவாய்ந்த ஒலி பெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒலி மாசு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் வழிபாட்டு தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement