கடையல் பேரூராட்சி முன்பு கவுன்சிலர் காத்திருப்பு போராட்டம்
அருமனை, அக். 1:கடையல் அருகே உள்ள கோலஞ்சி மடம் பாலத்தை சீரமைக்க 2023ம் ஆண்டு ரூ.2 கோடியே 18 லட்சத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்ட வனத்துறை அனுமதி வழங்காததால் பாலம் கட்டும் பணி கைவிடப்பட்டது. இதனையடுத்து பொமக்கள் மீண்டும் வலியுறுத்தியதால் பேரூராட்சி சார்பில் பாலம் அமைக்க ரூ.81 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதுவும் பணி நடைபெற வில்லை. தற்போது ரூ. 33 லட்சம் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணி தொடங்க வில்லை. இதனை கண்டித்தும், பாலப்பணியை உடனே தொடங்க கோரியும் 4வது வார்டு கவுன்சிலர் ரகு கடையல் பேரூராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மாலையில் செயல் அலுவலர் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் ஜூலியட் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாம் இணைந்து வருகிற வெள்ளிக்கிழமை அதிகாரிகளை சந்தித்தது பாலப்பணி குறித்து விளக்கலாம் என்று கூறினர். இதனையடுத்து பேராட்டத்தை கை விடப்பட்டது.