குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
குளச்சல்,ஆக.5 : குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம் இரணியல் சக் ஷம் அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.
ஒன்றிய பொதுச் செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய பொருளாளர் முருகன்,செயலாளர் ரமேஷ் கண்ணன், ரகு, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பார்வையாளர் வழக்கறிஞர் ஆறுமுகம் கலந்து கொண்டார். கூட்டத்தில் நெய்யூர் பேரூராட்சி பாளையம் பகுதியில் எவ்வித அரசு அனுமதியுமின்றி ஜெப கூடாரம் அமைப்பதை தடை செய்ய கேட்டு இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, வரும் 8ம் தேதி குமரி பாலனின் 32 வது நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோயில் அருகில் அவரது திருவுருவப்படத்திற்கு வீரவணக்க நிகழ்ச்சி நடத்துவது எனவும், அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகன பேரணி நடத்துவது,ஆகஸ்ட் 27 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.