மாம்பழத்துறையாறு அணையில் 40 கன அடி தண்ணீர் திறப்பு
நாகர்கோவில், செப்.3: குமரி மாவட்டத்தில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது. மாவட்டத்தில் பாலமோர், மாம்பழத்துறையாறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்திருந்தது. இந்தநிலையில் மாம்பழத்துறையாறு அணையில் இருந்து வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் நேற்று திறந்துவிடப்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41.16 அடியாகும். அணைக்கு 475 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 562 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 62.75 அடியாகும். அணைக்கு 143 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.
385 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 6.79 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 168 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 6.89 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 15.3 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 24.28 அடியாகும். முக்கடல் அணையின் நீர்மட்டம் 9.5 அடியாகும். குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளது.