அதிமுக அமைப்பு செயலாளராக குமரி முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நாகர்கோவில், செப். 2: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவின் அமைப்பு செயலாளராக குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் நியமிக்கப்படுகிறார். இவருக்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். குமரி மாவட்டத்தில் ஏற்கனவே தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பச்சமால், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக உள்ள நிலையில், தற்போது முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட்டுக்கும் அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், முன்னாள் எம்.பி. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான நாஞ்சில் வின்சென்ட்டுக்கு திடீரென பொறுப்பு கொடுத்திருப்பது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.