மாவட்ட ஓவியப்போட்டி மவுண்ட் லிட்ரா பள்ளி மாணவிக்கு முதல்பரிசு
அஞ்சுகிராமம், டிச.8: மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியர் செகண்டரி பள்ளியை சேர்ந்த மாணவி ஜான் பெட்ஸி (10ம் வகுப்பு) உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார்.
Advertisement
இதையடுத்து கலெக்டர் அழகுமீனா மாணவிக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் தில்லை செல்வம், பள்ளி முதல்வர் தீபசெல்வி, இயக்குநர்கள் முகிலரசு, ஆடலரசு, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.
Advertisement