ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் `கல்விக்கூடங்களில் கம்பர் 2025’ மாவட்ட தேர்வு போட்டி
அஞ்சுகிராமம், டிச.8: `கல்விக்கூடங்களில் கம்பர் 2025’ போட்டியின் குமரி மாவட்ட தேர்வு போட்டி அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 6 பள்ளிகள் பங்கேற்றன. நடுவர்களாக விவேகானந்தா கல்லூரி உதவி பேராசிரியர் ராம்குமார் மற்றும் அருணாசலா கல்லூரி உதவி பேராசிரியர் ராதிகா ஆகியோர் செயல்பட்டனர். மொத்தம் 11 போட்டியாளர்கள் பங்கேற்று கம்பர் பாடல், உரை மற்றும் தொடர்புடைய இலக்கிய
திறன்களை வெளிப்படுத்தினர். இவர்களில் திறமையாக தங்களது ஆற்றலை வெளிப்படுத்திய 3 மாணவர்கள் 2ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு போட்டியை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் மற்றும் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் ஜாண் வில்சன், பள்ளி தாளாளர் வக்கீல் ஜெபில் வில்சன் மற்றும் பள்ளி இயக்குனர் ஷெரின் சந்திரலீலா ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.