காலி மதுபாட்டில்களை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், செப்.2: டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாயை வாடிக்கையாளரிடம் பெற்று, மீண்டும் வாங்கிய மது பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலாக கொடுக்கும் பொழுது கூடுதலாக வாங்கிய பத்து ரூபாயை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தரப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்தத் திட்டமானது, நேற்று நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இத்திட்டத்தினை எதிர்த்து டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அலுவலகத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது ஏற்பட்டது.
குறிப்பாக டாஸ்மாக் ஊழியர்கள், தாங்கள் பணி புரியும் அலுவலகத்தில் மது பாட்டில்கள் வைப்பதற்கு போதிய இடம் இல்லை. டாஸ்மாக்கில் பணிபுரியும்போது இயற்கை உபாதை கழிப்பதற்கு கழிப்பறைகள் இல்லை என்றும், தங்களுக்கு மேலும் பணி சுமையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் காலி மது பாட்டில்களை வாங்குவதை நடைமுறைப்படுத்துவதிலும், அதேபோன்று காலி பாட்டில்கள் வாங்குவதற்கு போதிய ஊழியர்கள் இல்லாததால், பணி சுமையை அதிகரிக்கக்கூடும், ஆகையால் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் வாங்கும், இத்திட்டத்தினை முற்றிலுமாக எதிர்கிறோம் என்று கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்கள் பணி புரியும் டாஸ்மாக் கடைகளை விரிவு படுத்த வேண்டும். கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் பனிச்சுமையை அதிகரிக்கும் வகையில் எந்த செயல்பாடுகளும் இருக்கக் கூடாது என்று பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு முன் வைத்தனர்.