செங்கல்பட்டு கொளவாய் ஏரி நிரம்பியது
செங்கல்பட்டு, அக்.31: காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 75 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான செங்கல்பட்டு கொளவாய் ஏரி 2210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. செங்கல்பட்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக வற்றாத ஏரியாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் செங்கல்பட்டு கொளவாய் ஏரி முழுமையாக நிரப்பி மதகு வழியாக உபரிநீர் வெறியேறி வருகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இந்த கொளவாய் ஏரி நிரம்பி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த ஏரியை தூர்வாரி விவசாய நிலத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும், மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கொளவாய் ஏரியில் கலக்கிறது, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், படகு சவாரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
