வடகிழக்கு பருவமழை தீவிரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 62 ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரம், அக்.25: வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக மழை பெய்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 62 ஏரிகள் நிரம்பியுள்ளது. வங்கக் கடலில் புயல் சின்ன உருவாகி உள்ளது என வானிலை மையம் அறிவித்த நிலையில், கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு கனமழை மற்றும் மிதமான மழை பெய்ந்து வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், பெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவா கூட்டை தெரு, லிங்கப்பன் தெரு, முருகன் காலனி, பல்லவர் மேடு போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக நீர்வரத்து கால்வாய்கள் மூலம், நீர்வரத்து வந்துக்கொண்டு இருப்பதால் தாமல் மதகுஏரி, தாமல் சக்கரவர்த்தி தாங்கள், தைப்பாக்கம் ஏரி, கூரம்சித்தேரி, கோவிந்தவாடி சித்தேரி, திருப்புப்குழி ஏரி, திருப்பூலிவனம் ஏரி, இளநகர் ஏரி, அனுமன் தண்டலம் ஏரி, சிருங்கோழி ஏரி, காவனூர் புதுச்சேரி ஏரி, மருத்துவம் பாடி ஏரி, கோவிந்தா வாடி பெரிய ஏரி, மருத்துவம் பாடி ஆகிய 60 பெரிய ஏரிகளும், இந்த பெரிய ஏரிகளில் தாமல், உத்திரமேரூர் ஏரியும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 381 ஏரிகள் உள்ளது. இதில், மேற்கூறிய 62 ஏரிகள் 100 சதவீதமும், 60 ஏரிகள் 75 சதவீதமும், 137 ஏரிகள் 50 சதவீதமும், 119 ஏரிகள் 25 சதவீதமும் 25 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும், மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகளான தாமல் ஏரி 2307 ஏக்கர் விவசாய நீர் பாசனம் செய்யக்கூடியது. தற்போதைய நிலவரப்படி 18 கன அடி நீர் வந்து, முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அதேப்போல், தென்னேரி 5858 ஏக்கர் நீர் பாசனமும், கொள்ளளவு 18.60 கன அடியில் தற்பொழுது நிலவரப்படி 11.30 கன அடி நீர்வரத்து உள்ளது. உத்திரமேரூர் 5636 ஏக்கர் நீர் பாசனமும் 20 அடியில் தற்போதைய நிலவரப்படி 19.50 கன அடி நீர்வரத்தும், பெரும்புதூர் 1423 ஏக்கர் நீர் பாசனமும் 17.70 கொள்ளளவில் தற்போதைய நிலவரப்படி 15.10 கன அடி நீர்வரத்தும், பிள்ளைப்பாக்கம் 121.84 ஏக்கர் நீர் பாசனமும் 13.10 கொள்ளளவில் தற்போதைய நிலவரப்படி 11.20 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. மணிமங்கலம் 2079 ஏக்கர் விவசாய நிலங்களில் நீர் பாசனமும் 18.60 கன அடி கொள்ளளவில் தற்போதைய நிலவரப்படி 13.14 கன அடி நீர்வரத்து வந்து, மழையின் காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் தாமல் ஏரி, உத்திரமேரூர் ஏரி தனது முழு கொள்ளளவை 18 கன அடி தற்போதைய 18 கன அடி கொள்ளளவு எட்டியுள்ளது. தற்போது தாமல், உத்திரமேரூர், பழையசீவரம் தடுப்பனையில் இருந்தும் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.