தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியனூர் பேருந்து நிறுத்தம் அருகே பனங்கிழங்கிற்காக நெடுஞ்சாலையை வெட்டி எடுத்து பனை விதைகள் புதைப்பு:  மழையின்போது சாலை உடைவது உறுதி  வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் அச்சம்

செய்யூர், செப், 23: ஜமீன் எண்டத்தூரில் இருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அரியனூர் பகுதியில் பனங்கிழங்கிற்காக சாலையை வெட்டி எடுத்து பனை விதைகளை புதைத்து வைத்துள்ளனர். இதனால், மழையின்போது, அரிப்பு ஏற்பட்டு சாலை உடைவது உறுதி என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை உடைப்பு, விபத்து ஏற்படுவதற்கு முன்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் இருந்து ஜமீன் எண்டத்தூர், கல்பட்டு, அரியனூர், பெரியவெண்மணி, அம்மனூர் வழியாக செய்யூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் அரசு பேருந்துகள், கனரக லாரிகள், தொழிற்சாலை வானங்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர்.

Advertisement

இந்த சாலை குறுகிய அளவில் இருப்பதால் பெரிய வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது ஒன்றை ஒன்று கடப்பது பெரும் சிக்கல்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில், அரியனூரில் இருந்து கல்பட்டு செல்லும் சாலையில் அரியனூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குடியிருப்புகள் உள்ளன. அதன் எதிரே சாலையின் மண்ணை வெட்டி எடுத்து பனை கிழங்கிற்காக பனை விதைகளை போட்டு புதைத்து வைத்துள்ளனர். தற்போது மழைக்காலம் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டால் தார் சாலை அரித்து செல்லும் நிலை உள்ளது. மேலும், அந்த இடத்தில் சுமார் 3 அடிக்கு பள்ள உள்ளதால் சாைல வெட்டப்பட்ட பகுதியில் வாகனங்கள் ஓரம் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலை சேதம், விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் மண் கொட்டி நிரவி விபத்தை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement