தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலவாக்கம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு:சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

மதுராந்தகம், ஆக. 23: சாலவாக்கம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில் கோடை மழையை நம்பியும், கிணற்றுப் பாசனம் மற்றும் ஆழ்துளை கிணற்று உள்ளிட்ட நீர் ஆதார மூலமாக பாசனம் செய்தும் ஏராளமான விவசாயிகள் கோடையில் இரண்டாவது போகம் நெற்பயிர் நடவு செய்து அதன் அறுவடை சீசன் தற்பொழுது கலைக்கட்டியுள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

Advertisement

அதன் மீது அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உரிய நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார் முன்னிலை விகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் வரவேற்றார். இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதற்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் இதேபோன்று சாலவாக்கம், மாம்பாக்கம் மெய்யூர் ஓடை ஆகிய கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் வசந்திகுமார், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், கவுன்சிலர் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் பெருமாள், துணைத் தலைவர்கள் நந்தா, ரேணுகா, தாமோதரன், அழகப்பன், தங்கராஜ், விஷ்ணு கிராம பொதுமக்கள், விவசாயிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோ கலந்து கொண்டனர். இதுபோல, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், கீழ்ப்புத்தூரில் ரூ.5.50 கோடி செலவில் 3000 மெ.டன் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள நெல் சேமிப்பு கிடங்கு என மொத்தம் ரூ.23.27 கோடி செலவில் மொத்தம் 12,500 மெ.டன் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள 5 வட்ட செயல்முறை கிடங்குகள் என ரூ.60.85 கோடியில் 10 நவீன நெல் சேமிப்பு கிடங்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

Advertisement