ஏரியில் மூழ்கி பெண் பலி
தாம்பரம், செப்.22: தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பெரிய ஏரியில் நேற்று காலை பெண் சடலம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள், சிட்லபாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், சிட்லபாக்கம் எம்ஜிஆர் நகர், வள்ளுவர் தெருவை சேர்ந்த ஏகவள்ளி (75) என்பது தெரிய வந்தது.
இவருக்கும், இவரது மருமகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று காலை சர்ச்சுக்கு செல்வதாக கூறி சென்றவர் ஏரியில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன், இதே ஏரியில் 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.