கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு
மதுராந்தகம், ஆக.22: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகேயுள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி சரோஜா ரகுபதி கலையரங்கில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் வரவேற்றார். மேலும் கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணா மலை குத்துவிளக்கு ஏற்றி தொடக்க உரையாற்றினார். இதை தொடர்ந்து கல்லூரி புல முதல்வர்கள், அசோசியேட் டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, கல்லூரி அசோசியேட் டீன்கள் தினேஷ்குமார், சிவக்குமார் திருநடனசிகாமணி ஆகியோர் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் பற்றியும் கல்லூரியின் நடைமுறைகள் பற்றியும் வேலைவாய்ப்பு பற்றியும் மாணவர்களிடையே விளக்கம் அளித்தனர். மேலும் கல்லூரியில் விளையாட்டு துறை சார்பில் விளையாட்டின் முக்கியத்துவங்கள் குறித்தும் கல்லூரியில் நடத்தப்படும் போட்டிகள் குறித்தும் வெற்றி பெற வைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக துறைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.