விவேகானந்தா வித்யாலயா பள்ளி சார்பில் ஆதரவற்ற குழந்தைகள், கழைக் கூத்தாடிகளுக்கு தீபாவளி பரிசு
மதுராந்தகம், அக்.18: விவேகானந்தா வித்யாலயா பள்ளி சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கழைக் கூத்தாடிகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது. மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சார்பில் கடவுளின் குழந்தைகள் என்ற தலைப்பில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கழைக் கூத்தாடிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி, புத்தாடை, மளிகைப் பொருட்கள், பட்டாசு உள்ளிட்ட பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விவேகானந்தா பள்ளி குழுமத் தலைவர் லோகராஜ் தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி மங்கையர்கரசி, சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் ஹரினாக்ஷி சசிதரன், பள்ளி முதல்வர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சீதாலட்சுமி அனைவரையும் வரவேற்றார். இதில், ஆதரவற்ற பள்ளி சிறுவர்கள் மற்றும் முல்லை நகரில் வசித்து வரும் 50 கழைக் கூத்தாடிகளுக்கு புத்தாடைகள், அரிசி, பட்டாசு இனிப்பு உள்ளிட்ட பொருட்களை பாஜ மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன் குமார், பள்ளி தாளாளர் லோகராஜ், சிபிஎஸ்இ மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவமாணவிகள் வழங்கினர். மேலும், பள்ளி வளாகத்தில் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இறுதியில் பள்ளியின் துணை முதல்வர் கீதா நன்றி கூறினார்.