திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கை ரூ.69.89 லட்சம்
திருப்போரூர், செப்.10: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியல்களில் போடப்பட்ட காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், பக்தர்களால் 69 லட்சத்து 89 ஆயிரத்து 708 ரூபாய் ரொக்கமும், 294 கிராம் தங்கமும், 6400 கிராம் வெள்ளியும் போடப்பட்டு இருந்தது. இந்த, பணியில் ஏராளமான பக்தர்கள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement