தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அதிக வாக்குகளை பெற்று மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும்: பொது உறுப்பினர் கூட்டத்தில் எம்எல்ஏ சுந்தர் பேச்சு

மதுராந்தகம், செப்.9: வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அதிக வாக்குகள் பெற்று மீண்டும் திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என லத்தூர் வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பேசினார். லத்தூர் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், பவுஞ்சூர் அருகே நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இதில், அவைத்தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் கார்த்திக் ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் ஏமநாதன், பாஸ்கரன், ரமணி பாண்டுரங்கன், சுந்தர வடிவழகன், தேவராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, ராஜேந்திரன் ஒன்றிய குழு பெருந்தலைவர் சாந்தி ராமச்சந்திரன், துணைப் பெருந்தலைவர் சித்ரா ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசுகையில், ‘உடல் நலக்குறைவால் மறைந்த ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் மறைவுக்குப் பின்பு அவரது மகன் கே.எஸ்.ஆர்.கார்த்திகேயனை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன், திமுக நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும்.

வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டு அதிக வாக்குகளை பெற்று மீண்டும் இந்த செய்யூர் தொகுதியில் வெற்றி பெற வைக்க வேண்டும். செப்.15ம் தேதி அன்று அண்ணா பிறந்தநாள் விழாவை இந்த ஒன்றியத்தில் உள்ள கிளை கழகம் தோறும் திமுக கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாட வேண்டும். இந்த ஒன்றியத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் 48 சதவீதம் உறுப்பினர்களை சேர்த்துள்ளீர்கள். அதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்’ என்றார். இக்கூட்டத்தில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், திமுக மூத்த முன்னோடிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement