சிங்கபெருமாள்கோவில் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு
செங்கல்பட்டு, செப்.9:செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையம் 3வது நடைமேடை அருகே தண்டவாளப் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு ஆண் புறநகர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடப்பதாக நேற்று முன்தினம் செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக அப்பகுதிக்கு வந்தார், மதுபோதையில் தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement