விவசாயிகள் சங்க திறப்பு விழா
மதுராந்தகம், நவ.5: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு ஆலோசனைப்படி மதுராந்தகம் வட்டம், குன்னங்குளத்தூர், சூரை மற்றும் இந்திராபுரம் ஆகிய 3 கிராமங்களில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் கிளைகள் திறப்புவிழா மற்றும் உறுப்பினர் கார்டு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஆத்தூர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மாம்பாக்கம் சேகர் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட பொருளாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார். இதில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணன், மதுராந்தகம் ஒன்றிய தலைவர் முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement